இன்று வந்ததற்கு 5 லட்சம் லாபம்.! மேடையில் முதல்வர் ஸ்டாலின் கலகலப்பான பேச்சு.!
இன்று விழாவுக்கு வந்ததற்கு எனக்கு 5 லட்சம் லாபம். அது எனக்கில்லை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவுகாக திமுக நிர்வாகி செந்தில் வழங்கிய நிதியுதவி என கலகலப்பாக பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம் பெருத்துறையில் திமுக நிர்வாகி வீட்டு திருமண விஷேசத்திற்கு சென்றுள்ளார். நாளை திருமண விழா நடைபெறுவதை ஒட்டி, இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசுகையில், திமுகவில் இளைஞரணி ஆரம்பித்த போது, தனது உறுதுணையாக இருந்த ஈரோட்டை சேர்ந்த மறைந்த திமுக நிர்வாகி எவரெஸ்ட் கணேசன் என்பவரை நினைவு கூர்ந்தார்.
அதன் பின்னர் பேசுகையில், வந்ததற்கு இன்று எனக்கு 5 லட்சம் லாபம் என கூறிவிட்டு, அது எனக்கில்லை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவுகாக திமுக நிர்வாகி செந்தில் வழங்கிய நிதியுதவி. முதன் முதலாக தற்போது அவர் கொடுத்து தொடங்கி வைத்துள்ளார். அவர் கைராசி எப்படி இருக்கப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம். என கலகலப்பாக பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.