ஸ்பெயினுக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!
வெளிநாடு செல்வதற்கு முன்னர் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல உள்ளேன் என தெரிவித்தார். மேலும் முதல்வர் பேசும் போது, “முதலீடுகள் ஈர்ப்பது தொடர்பாக பயண நாட்கள் தவிர்த்து, 8 நாட்கள் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் புறப்படுகிறேன்.
பிப்ரவரி 7ஆம் தேதி சென்னைக்கு திரும்புகிறேன். ஸ்பெயின் நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த உள்ளேன். இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உகந்த மாநிலம் என்பதை எடுத்துரைக்க உள்ள சூழலில், ஸ்பெயின் நாட்டின் தொழில்முனைவோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை..! வியாபாரிகள் அச்சம்: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதே நமது ஒரே இலக்கு. அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற்றது” என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து துபாய் செல்லும் முதல்வர் அங்கிருந்து ஸ்வீடன் சென்று அதன்பிறகு ஸ்பெயின் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.