திருச்சி என்றாலே திருப்புமுனை! பாஜகவை வீழ்த்தி… தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு

M.K. Stalin: மக்களவை தேர்தலுக்கான திருச்சி, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி சிறுகனூரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிரசாரத்தை தொடங்கினார். திருச்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாகவது, “திருச்சி என்றாலே திமுக தான், திருச்சியில் இருந்து தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதைதான். இந்தியாவில் திருப்புமுனையை ஏற்படுத்த திருச்சியில் ஒன்றிணைந்துள்ளோம்.

Read More – பாமக வேட்பாளர் பட்டியலில் அதிரடி மாற்றம்..! அன்புமணி ராமதாஸ் மனைவி தர்மபுரியில் போட்டி

திருச்சி என்றாலே திருப்புமுனை, இந்தியாவே பாராட்டும் ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம். இந்தியாவுக்கு இப்போது திருப்புமுனை தேவைப்படுகிறது. திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை.

10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு செய்த ஒரு திட்டத்தை கூட சொல்ல முடியுமா? தமிழ்நாட்டிற்கான சிறப்புத்திட்டங்கள் எதையாவது பிரதமர் மோடியால் பட்டியலிட முடியுமா? பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்தி இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும்.

Read More – காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவிலும் சீட் இல்லை!

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைப்பதாக கூறி பா.ஜ.க. அரசு மக்களை ஏமாற்றியது. பா.ஜ.க. அரசின் தோல்விகளை மறைக்கவே தேவையில்லாத விஷயங்களை மோடி பேசுகிறார். பா.ஜ.க.,வின் தேர்தல் தோல்வி பயத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. 10 ஆண்டுகால பா.ஜ.க. அரசுக்கு தேர்தல் பத்திர ஊழல்தான் எடுத்துக்காட்டு.

Read More – மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி!

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பாஜக அரசின் ஊழல்கள் வெளியே வரும்.
விடுவோமா..? திமுககார்கள் நாங்கள், எனது தேர்தல் பிரச்சாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்கியதாக ஆளுநரிடம் தெரித்தேன்.. அதற்கு ‘BEST OF LUCK’ என ஆளுநர்” தெரிவித்தாக பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested