பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் மீதான துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பீம் ஆர்மி – சந்திரசேகர் ஆசாத் ராவன் – சஹாரன்பூர் – தியோபந்
பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் நேற்று உத்தரப்பிரதேசத்தில் சஹாரன்பூர் எனும் ஊரில் தனது கட்சி நிர்வாகி வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தியோபந் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது ஒரு கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
அவரை குறிவைத்து நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். இருந்தும் வயிற்றில் ஒரு குண்டு பாய்ந்து உள்ளது. பலத்த காயமடைந்த அவரை உடனடியாக தியோபந்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மருத்துவ மேல் சிகிச்சைக்காக சஹாரன்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர அபாய கட்டத்தை எட்டிவிட்டார் என மறுத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு செயலுக்கு பீம் ஆர்மி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல் கோழைத்தனமான செயல். குற்றம் செய்தவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் அசாத் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கூறுகையில், உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை கண்டிக்க வேண்டும். இந்த வன்முறை சம்பவம் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை அம்பலப்படுத்துகிறது. சந்திரசேகர் ஆசாத் விரைவில் குணமடைய வாழ்த்துவதுடன், இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். என தனது கண்டனத்தை முதல்வர் பதிவு செய்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…