பீம் ஆர்மி தலைவர் மீது துப்பாக்கி சூடு.. உ.பி-யில் சட்ட ஒழுங்கு சீர்கேடு.! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.!

Tamilnadu CM MK Stalin

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் மீதான துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பீம் ஆர்மி – சந்திரசேகர் ஆசாத் ராவன் – சஹாரன்பூர் – தியோபந்

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் நேற்று உத்தரப்பிரதேசத்தில் சஹாரன்பூர் எனும் ஊரில் தனது கட்சி நிர்வாகி வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தியோபந் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது ஒரு கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

அவரை குறிவைத்து நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். இருந்தும் வயிற்றில் ஒரு குண்டு பாய்ந்து உள்ளது. பலத்த காயமடைந்த அவரை உடனடியாக தியோபந்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மருத்துவ மேல் சிகிச்சைக்காக சஹாரன்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர அபாய கட்டத்தை எட்டிவிட்டார் என மறுத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு செயலுக்கு பீம் ஆர்மி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல் கோழைத்தனமான செயல். குற்றம் செய்தவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்  அசாத் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கூறுகையில், உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை கண்டிக்க வேண்டும். இந்த வன்முறை சம்பவம் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை அம்பலப்படுத்துகிறது. சந்திரசேகர் ஆசாத் விரைவில் குணமடைய வாழ்த்துவதுடன், இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். என தனது கண்டனத்தை முதல்வர் பதிவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்