ஆட்சிக்கு வந்தபின் முதல்முறை.! ஸ்பெயின் வந்தடைந்தேன்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் நோக்கத்தில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு பன்னாட்டு முதலீடுகளை தமிழகம் நோக்கி ஈர்த்து வருகிறார்.
சர்ப்ரைஸ்.! டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு வெளிநாடு பயணம் மேற்கொண்டதன் பலனாக இந்தாண்டு தொடக்கத்தில் தமிழகத்திற்கு சுமார் 6.64 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் கிடைத்தன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இம்மாத தொடக்கத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாகின. இதையடுத்து, தமிழகத்துக்கு மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
சனிக்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு தான் வந்துள்ளதையும், அங்கு தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்தும் எக்ஸ் சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ” ஸ்பெயின் வந்தடைந்தேன். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பிய நாட்டிற்கு பயணம் செய்துள்ளேன்.
இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் அவர்கள் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார். இன்று மாலை ஸ்பெயின் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களை சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்.” என பதிவிட்டுள்ளார்.
ஸ்பெய்ன் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்!@IndiainSpain தூதர் திரு @DineshKPatnaik அவர்கள் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார்.
இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில்… pic.twitter.com/GmmKbwfVpi
— M.K.Stalin (@mkstalin) January 29, 2024