எல்லாருக்கும் எல்லாம்.. சமூகநீதி வழிப்பாதையில் திராவிட மாடல்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்.! 

Tamilnadu CM MK Stalin

இன்று சென்னை கலைவாணர் அரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடபெற்றது. ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி , பள்ளிக்கட்டடங்கள், சமுதாய கூடங்கள் என 32.95 கோடி ரூபாய் செலவீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

அதே போல, 138  கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் புதியதாக கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். மேலும்,தூய்மை பணியாளர், நலவாரிய அமைப்பினர் மற்றும் இருளர் சமூகத்தினருக்கு 943 வீடுகள் வழங்குதல், 726 பேருக்கு 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், பணி நியமன ஆணைகள் உள்ளிட்டவைகளை வழங்குதல் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் மு.க.ஸ்டாலின்.! திருச்சி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.! 

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர் காட்டிய சமூக வழியில் நாம் பயணித்து வருகிறோம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நிர்வாக ரீதியில் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். சுந்திரம், சமூக நீதி, சமத்துவம் , சமதர்மம் ஆகிய பாதையில் திராவிட மாடல் அரசு இயங்குகிறது, மானுட நெறிகள் கொண்ட வழியில் நாம் ஆட்சி செய்து வருகிறோம் .

அதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நலனுக்காக அயராது உழைப்பவர்களுக்கு விருதும் பரிசு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறோம். அம்பேத்கர் விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. ட்கோ மூலம் 10,000 பேருக்கு ரூ.152 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai
rain update
Chennai high court