ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தினமும், கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு இருப்பதால், ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு தரப்பிலிருந்தும் பிரதமருக்கு கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். இன்று இரவு பிரதமர் மோடி, ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.
இந்த சமயத்தில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக காவல்துறை முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளாராம். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், ஏடிஜிபிகள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனராம். இதில், ஊரடங்கு காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளனராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025