தமிழக பாஜக தலைவராக எஸ்.வி.சேகர் ..!எஸ்.வி.சேகரை வாழ்த்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்..!

Default Image

எஸ்.வி.சேகர் கருத்து தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்கருத்து தெரிவித்துள்ளார்.

எஸ்.வி.சேகர் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர், காமெடி நடிகர் ஆவார்.இந்நிலையில் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறான கருத்தைப் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, எஸ்.வி.சேகர் மீது பல இடங்களில் அவதூறு வழக்கு தொடரபட்டது.வழக்குகளும் நடைபெற்று வருகிறது.

Image result for sv SEKAR BJP LEADER TAMILISAI

இந்நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் எஸ்.வி சேகர் கருத்து ஒன்றை தெரிவித்தார் .அவர் கூறுகையில், பாஜக சரியான பாதையில் போய் கொண்டிருக்கிறது.2019ல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவார்.எல்லாவற்றையும் ஒரே போல் பார்க்க கூடாது. என் மீது உள்ள வழக்கை சட்டப்படி எதிர் கொண்டு வெற்றி பெறுவேன்.

Related image

தமிழக பாஜக தலைமை ஏற்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் ஏற்றுக்கொண்டு தற்போது உள்ள சதவீதத்தை விட அதிகமான சதவீதம் ஓட்டு வாங்கி காட்ட முடியும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.ஆனால் அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி பாஜக தலைமையை நீங்கள் ஏற்கவில்லை என்ற கருத்து உள்ளதால் செயற்குழுவுக்கு உங்களை அழைக்கவில்லை என்கிறார்களே என்ற கேள்வி ஆகும்.பின்னர் அவர் தனது பதிலை மாற்றி கூறினார்.மேலும் நம்மை அழைத்தால் தான் போக முடியும்.அதற்காக தினமும் தமிழிசை வீட்டு முன் நின்று அக்கா நான் வந்துட்டேன்னு சொல்லணுமா?அவரை என்னைவிட வயதில் சிறியவர் என்றும் கூறினார்.

Image result for pon radhakrishnan

இந்நிலையில் எஸ்.வி.சேகர் கருத்து தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பா.ஜ.க. தமிழக தலைமைப் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளதாகக் கூறியுள்ள எஸ்.வி.சேகருக்கு வாழ்த்துகள்.அதேபோல் எஸ்.வி.சேகர் பா.ஜ.க.வில் அடிமட்ட தொண்டரும் தலைமை பொறுப்பை ஏற்க முடியும் என்பதை புரிந்து கொண்டதற்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழக பாஜக தலைவராக தமிழிசை உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2014 ஆகஸ்ட் முதல் இருந்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்