ஃப்ளூ காய்ச்சலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை.! மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்.!
தமிழகத்தில் ப்ளூ காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்படாத வகையில் போர்க்கால அடிப்படையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – மத்திய அமைச்சருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது புதுவித வைரஸ் காய்ச்சலான ஃப்ளூ காய்ச்சல் சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களுக்கு ஓர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ‘ தமிழகத்தில் ப்ளூ காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருகிறது.
இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும், அதிகரிக்கிறது. மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்படாத வகையில் போர்க்கால அடிப்படையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . அரசின் நடவடிக்கையுடன் ஒண்றிணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைவரும் ஒன்றாக இணைந்து ஃப்ளூ காய்ச்சலை தடுக்க போராடுவோம்.’ என அதில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.