தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்:ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது…!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர்:
ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 2 ஆம் தேதி) காலை 10 மணிக்கு கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது:
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது . ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நடைபெற்றது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை:
அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் பேசி சட்டப்பேரவையில் உரையை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.பின் முடிவு பெற்றது.
இதன் பின் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முதல்வர், துணை முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களும், திமுக சார்பில் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.