அங்கீகாரம் ரத்து செய்யப்படும்-தனியார் மருத்துவமனைக்கு அரசு எச்சரிக்கை
தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சில சிகிச்சைகளை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் தமிழக அரசு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.