வங்கி ஊழியர்களின் ஸ்ட்ரைக்! தமிழிசை அதிரடி ட்வீட்!

10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வங்கி ஊழியர்கள் அனைவரும் இன்று போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று மாண்புமிகுநிதியமைச்சர் @nsitharaman அவர்கள் உறுதி அளித்த பின்னரும் போராட்டஅறிவிப்பு ஏன்? போராட்டம்?போராட்டம்?என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்?வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும்?பொருளாதார சிரமங்களை சரிசெய்ய வேண்டாமா? https://t.co/mriVLpgBcU
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) August 30, 2019
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் அது தொடர்பாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் உறுதி அளித்த பின்னரும் போராட்டஅறிவிப்பு ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டம்?போராட்டம்?என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்?என்றும் வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும்?பொருளாதார சிரமங்களை சரிசெய்ய வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.