தெலங்கானா ஆளுநராக செப்டம்பர் 8-ஆம் தேதி பதவியேற்கிறார் தமிழிசை

தமிழிசை சௌந்தரராஜன் செப்டம்பர் 8-ஆம் தேதி தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்திரராஜன் தெலங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
நேற்று தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை ஆளுநருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்டார்.ஆளுநர் நியமன ஆணையை பெற்ற பிறகு தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், வாய்ப்பளித்த பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி .அனைத்திலும் தேர்ச்சி பெறுவது தான் எனது வழக்கம்.ஆளுநர் பதவியிலும் சிறப்பாக செயல்படுவேன் .
தமிழகம் – தெலங்கானா இடையே ஒரு தமிழ் மகளாக பாலமாக செயல்படுவேன். தமிழக மக்களின் பிரதிநிதியாக, தெலுங்கு மக்களின் சகோதரியாக செல்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழிசை சௌந்தரராஜன் செப்டம்பர் 8-ஆம் தேதி தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024