துண்டு சீட்டு இல்லாமல் 3 மணி நேரம் வரை பேச முடியும் -ஸ்டாலினுக்கு தமிழிசை மீண்டும் பதிலடி
என்னால் துண்டு சீட்டு இல்லாமல் 3 மணி நேரம் வரை புள்ளி விவரத்துடன் பேச முடியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ,ஒரு சவால் விடுகிறோம், மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் ஒரு மணி நேரம் பேச முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், எதையும் ஆதாரத்தோடு பேச வேண்டும்.தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போல் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது என்று பதில் கொடுத்தார்.
இந்த நிலையில் சென்னையில் ஸ்டாலினின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், துண்டு சீட்டு இல்லாமலும் புள்ளிவிவரங்களை என்னால் பேச முடியும். துண்டு சீட்டு இல்லாமல் 3 மணி நேரம் வரை புள்ளி விவரத்துடன் பேச முடியும் என்று தெரிவித்தார்.மேலும் ஸ்டாலின் மேடையில் ஒரு தலைப்பை கொடுத்தால் என்னால் 3 மணி நேரம் கூட பேச முடியும்.எந்த ஒரு துண்டு சீட்டும்,உதவியாளர்களும் இல்லாமல் பேச முடியும் என்றும் தெரிவித்தார்.