அமைச்சர் லிஃப்டில் மாட்டிக்கொண்ட சம்பவம்.! பாதுகாப்பில்லை என தமிழிசை விமர்சனம்.!
எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அந்த பாதுகாப்பை கொடுப்பது தான் அரசின் கடமை.- தமிழிசை சவுந்தராஜன்.
கடந்த மாதம் 29ஆம் தேதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொள்ள சென்றார் அப்போது அங்குள்ள லிஃப்ட் சரியாக பராமரிக்காத காரணத்தால் பாதியில் நின்றது. இந்த சம்பவம் அப்போது மிக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று உதவி பொறியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை குறிப்பிடும் வகையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் ஓர் நடைபெற்ற ஓர் நிகழ்ச்சியில் பேசுகையில், நாட்டில் விமானத்தில் சென்றால் தான் பாதுகாப்பு இல்லை என தோன்றும், அடுத்து காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும், ஆனால் இப்பொழுது லிஃப்டில் செல்வது கூட பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் , எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அந்த பாதுகாப்பை கொடுப்பது தான் அரசின் கடமை. என நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.