புதுச்சேரி வந்தடைந்த தமிழிசை சௌந்தரராஜன்..!
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார்.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரண்பேடி நேற்று துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநாராக பொறுப்பேற்கிறார். இதனால், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சற்று நேரத்திற்கு முன் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார்.
புதுச்சேரி வந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானாவில் ஒன்றரை ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றியுள்ளேன். புதுச்சேரிக்கு ஆளுநராக வந்துள்ளேன் என இருமுறை அழுத்தி கூறினார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பணி ஏற்பது கூடுதல் மகிழ்ச்சி தருகிறது என அவர் தெரிவித்தார்.