தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநராக தமிழிசை நியமனம்!
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசையை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகநியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ,மகாராஷ்டிரா,இமாச்சல பிரதேசம் மற்றும் கேரளாவுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்க பட்டுள்ளனர்.
இது குறித்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .கடின உழைப்புக்கு கட்சி அங்கீகாரம் கொடுத்துள்ளது எல்லாரும் ஒரே நாடு என்ற எண்ணத்தில் தெலுங்கானா செல்கிறேன்
ஆண்டவனுக்கும் ஆண்டுக்கொண்டு இருப்போருக்கும் மனமார்ந்த நன்றி. பாஜகவின் அன்பான தொண்டர்களுக்காக தந்தையை விட்டுக்கொடுக்க நேரிட்டது வருத்தமளிப்பதாக கூறினார்
தெலுங்கானா ஆளுநராக இருந்தாலும் நான் தமிழ்மக்களின் சகோதரி தான் என்று கூறி நெகிழ்ச்சியில் கண் கலங்கினார் தமிழிசை.