அமெரிக்க யூடியூப்பருக்கு விருந்து வைத்த தமிழர்கள்… ஆங்கிலத்தில் கலக்கும் தமிழன்… வைரல் வீடியோ.!

ஜெய் ஸ்ட்ரேஸி என்ற அமெரிக்க யூடியூபர் தமிழர்களிடம் பேசுவதாக இருக்கட்டும், தமிழர்கள் ஆங்கிலத்தில் ஜெய் ஸ்ட்ரேஸிடம் பேசும் விதமாக இருக்கட்டும் அப்படி அழகாக இருக்கிறது.

American YouTuber - jaystreazy

சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கிருக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் மக்களின் பண்புகளை நேரலையாக தனது சமூக வலைதள பக்கங்களின் வாயிலாக பதிவு செய்து புகழ் பெற்ற சமூக ஊடக நட்சத்திரமாக விளங்குகிறார்.

இவர், டிக் டாக்கில் தொடங்கி சமூக வலைதளத்தில் இருக்கும் அனைத்து ஊடகங்களிலும் சிறந்து வழங்குகிறார். அதில் ஒன்றான, யூடியூப்பில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜெய் ஸ்ட்ரேஸி, ஏழு வருடங்களில் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்து லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ளார். இவரது 253K  சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளார், அதில் பதிவில் வீடியோ பதிவுகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

இந்த முறை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட இவர், தமிழ் மக்களிடம் பேசும் உரையாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜெய் ஸ்ட்ரேஸி தமிழர்களிடம் பேசுவதாக இருக்கட்டும், தமிழர்கள் ஆங்கிலத்தில் ஜெய் ஸ்ட்ரேஸிடம் பேசும் விதமாக இருக்கட்டும் அப்படி அழகாக இருக்கிறது.

இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில், சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் அவர் (jay streazy), கூகிள் மேப்பை பார்த்துக்கொண்டு ஒரு முட்டு சந்திற்கு சென்று விடுகிறார். அப்போ என்னடா கூட்டமா இருக்குனு பார்க்கும் ஜெய் ஸ்ட்ரேஸி, திருமணம் விழா என்பதை புரிந்து கொள்கிறார்.

பின்னர், அங்கிருக்கும் நபர்களிடைம் நான் இந்த வழியாக அங்கிருக்கும் ரோட்டுக்கு செல்ல வேண்டும் என்று சொல்ல, இது திருமண வீடு, எல்லாரு உணவு அருந்தி கொண்டிருக்கிறார்கள். நீங்களும் வந்து உணவருந்துங்கள் என்று கூற, உடனே ஜெய் ஸ்ட்ரேஸி, ஓ நானா முதலில் வேண்டாம் என்று கூறிவிட்டு ஒருவழியாக அவர்களின் கட்டாயத்திற்கு உணவருந்த செல்கிறார்.

அங்கு அவருக்கு ‘வாழை இலையில், தமிழர்கள் பாரம்பரிய விருந்தை’ உண்ட பிறகு, மெய் மறந்த ஜெய் ஸ்ட்ரேஸி பினிஷிங் டச்சாக பாயசம் வழங்கப்பட்டது. அந்த பாயசத்தையும் அருந்தி கொண்டு, இறுதியில் மாப்பிள்ளை வந்ததும் அவரிடமும் உரையாடினார். இவ்வாறு, தமிழர் அமெரிக்கரிடம் ஆங்கிலம் பேசும் இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Anant Ambani Chicken
Kachchatheevu - MKStalin
K. C. Venugopal
Kachchatheevu - BJP
a RASA - Sekar Babu
krishnamachari srikkanth ravichandran ashwin