தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!

சென்னை தியாகராய நகரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போலீசாரால்கைது செய்யப்பட்டு, அருகே உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

bussyanand Arrest

சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக வந்த புகாரின் பேரில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் இன்று எழுதியிருந்தார். அதில், “யாரிடம் நாம் பாதுகாப்பு கேட்பது? ஆட்சியாளர்களை கேட்டு பயனில்லை. எல்லா சூழலிலும் நான் உங்களுடன் நிற்பேன். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். இதை நாம் இணைந்தே சாத்தியப்படுத்துவோம்” என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு அரசியல் வட்டாரங்களில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் வந்தது. இதனிடையே, அண்ணா பல்கலைகழகத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை கோயம்பேடு வி.ஆர் மால் வாசலில் விஜய் கைப்பட எழுதிய கடிதத்தை துண்டு பிரசுரங்களாக வழங்கிய த.வெ.க. பெண் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

தற்பொழுது, தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பக்கம், அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக சென்னை தி.நகரில் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மறுபக்கம், சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு விஜய் எழுதிய கடிதத்தை விநியோகம் செய்த தவெக பெண் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களை காண சென்றபோது, புஸ்ஸி ஆனந்தும் கைது செயது தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து, மண்டபத்தில் தங்க வைத்துள் மகளிருக்கு மூச்சு விட முடியவில்லை, சாப்பாடு தரவில்லை, குடிநீர் தரவில்லை,  என த.வெ.க. தொண்டர்கள் குற்றம்சாட்டியதோடு, புஸ்ஸி ஆனந்த் கைது கைது நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பான விரிவான தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்