தமிழச்சி தங்கபாண்டியன் தாயார் மறைவு! திமுக தலைவர்
முன்னாள் திமுக அமைச்சர் தங்கபாண்டியன் மனைவியும், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தாயாயாருமான ராஜாமணி தங்கபாண்டியன் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ராஜாமணி தங்கபாண்டியன் உடல் நலிவுற்று மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்குத் திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.