ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 5 வரை ‘தமிழ் வார விழா’ நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார்.

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து முதல்வர்.மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பாக பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என அறிவித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில் ” பாரதிதாசனை போற்றும் வகையில் சட்டப்பேரவையில் நான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியீடுகிறேன். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி ஏப்.29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம் நடைபெறும். பாரதிதாசனை மையமாக வைத்து பல இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதைப்போலம, பள்ளிகளில் தமிழின் பெருமையை எடுத்துரைக்க பேச்சுப்போட்டி..கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும். அதைப்போல, அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள் நடைபெறும்.
நமது மொழியின் பெருமைகளை எடுத்துரைக்க தமிழ் வார விழா ஒரு நல்வாய்ப்பாகும் எனவே, செந்தமிழைப் பரப்ப, அறிவுச் செல்வத்தைக் காட்ட தமிழ் வார விழா வழிவகை செய்யும் இதனை அறிவிப்பதில் தமிழக முதல்வராக நான் பெருமை கொள்கிறேன். அதைப்போல பாவேந்தர் பெயர் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் எனவும், 110 விதியின் கீழ் பாவேந்தர் பாரதிதாசனை போற்றும் வகையில் புதிய அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025