தேர்வில் இனி தமிழுக்கு முதலிடம் – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
அதன்படி, டி.என்.பி.எஸ்.சி வினா – விடைத்தாள், அறிக்கையில் இனிமேல் தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழக அரசுத் துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த தேர்வாணையத்திற்கு அண்மையில் நான்கு புதிய உறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்திருந்தது.
தமிழக அரசால் ஏற்படுத்தப் பெற்ற இந்த தேர்வாணையம் ஒரு தலைவர் மற்றும் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025