அரியலூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அருள்செல்வன்(35) என்பவர் தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு அருள்செல்வன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தலைமையாசிரியை ராஜேஸ்வரியிடம் மாணவி புகார் தெரிவித்தார்.
மாணவி, தமிழாசிரியரை அழைத்து பேசிய தலைமையாசிரியர் இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவர இன்று பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் டிஎஸ்பி மதன் அருள்செல்வனை போக்சோவிலும், புகாரை மூடி மறைக்க முயன்றதாக பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அருள்செல்வன் கடந்த மாதம் 10 ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…