“தபால் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தமிழ் பாடம் இணைக்கப்பட வேண்டும்”- சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்..!

Published by
Edison

மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தின் விபரம் கீழே தெரவிக்கப்பட்டுள்ளது.

தபால் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தமிழ் பாடம் இணைக்கப்பட வேண்டும் என்று கூறி மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“தபால் துறையின் வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.அதாவது,தபால் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் மாநில மொழி தேர்ச்சிக்கு எந்த ஏற்பாடும் இல்லை.

அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் ஆகிய பணிகளை செய்யும் ஊழியர்களுக்கான தேர்வுகளை அலுவலர் நியமன ஆணையம் ( Staff Selection Commission) நடத்தும் போது தமிழில் அவர்கள் உரையாடக் கூடியவர்களா என்று கூட சோதித்துப் பார்ப்பதில்லை. இவர்களிடம் சேவை நாடி வரும் பொதுமக்கள் திண்டாடுகிறார்கள். அந்த பணியாளர்களும் தங்கள் பணியை திறம்பட ஆற்ற முடிவதில்லை. ஆய்வாளர்கள் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பவர்கள். கடந்த 10 ஆண்டுகளில் ஆய்வாளர் பணிக்கு நடைபெற்றுள்ள நேரடி நியமனங்களில் தேர்வு செய்யப்பட்ட 60 பேரில் 57 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று அறிய வருகிறேன்.

தபால் அலுவலகங்களின் கதவைத் தட்டுபவர்களில் பெரும்பான்மையோர் கிராமங்களில் இருந்து வருபவர்கள். பொருளாதாரத்தில் அடித்தட்டு மக்கள். இத்தகைய கோடிக்கணக்கான மக்களை இணைக்கிற தபால் ஊழியர்கள் தமிழ் அறிந்திருக்க வேண்டாமா?

எனவே தபால் ஊழியர் நியமன முறையில் தமிழ்த் தேர்ச்சிக்கான தேர்வு இணைக்கப்பட வேண்டும். பள்ளி இறுதி தேர்வு’ மேல்நிலை கல்வித் தேர்வில் தமிழ் பாடமாக இருந்து அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த தேர்வில் விதி விலக்கு அளிக்கலாம்.

இக்கோரிக்கையை பரிசீலித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். இது அஞ்சல் சேவையை மேம்படுத்தும். அதை நாடி வரும் மக்களுக்கும் பெரும் பயன் தரும். மத்திய அரசு இக்கோரிக்கைக்கு செவிமடுக்குமென்று நம்புகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…

44 minutes ago

அமைச்சர் பொன்முடி பதவியில் திருச்சி சிவா! மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…

1 hour ago

தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…

1 hour ago

சர்ச்சை பேச்சு எதிரொலி! பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு!

சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…

2 hours ago

“இது என் கிரவுண்ட்.,” கே.எல்.ராகுலின் ‘மரணமாஸ்’ கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ….

பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…

2 hours ago

அமைச்சர் பொன்முடியின் ‘கொச்சை’ பேச்சு! “ஏற்றுக்கொள்ள முடியாது!” கனிமொழி கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…

3 hours ago