தமிழ் மொழியை பிறமாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை.
சென்னை பல்கலைக்கழகத்தின் 164-ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, சென்னை பல்கலைக்கழகம் பழமையானது மட்டுமல்ல, பெரும் சிறப்பு வாய்ந்தவையாகும். நாட்டின் அனைத்து துறைகளிலும் புகழ்பெற்ற தலைவர்களை உருவாக்கியது சென்னை பல்கலைக்கழகம். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் நோபல் பரிசை பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள். சென்னை பல்கலைக்கழகத்தின் இழந்த பெருமையை மீட்டெடுக்க ஆசிரியர்களும், இதர ஊழியர்களும் பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் குறிப்பிட்டது போல் தமிழ் மிகவும் பழமையான மொழி. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும். நீதி வேண்டி நீதிமன்றங்களை அணுகுவோருக்கு வழக்கு விவாதங்கள் புரிய வேண்டும். தமிழ் மொழியை பிறமாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழ் இருக்கைகளை பிற மாநில பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சிப்பேன். முதலமைச்ச பேரவையில் அறிவித்தபடி, 4,500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டை அறிந்திருந்தனர். 1800-களில் இரும்பு உற்பத்தியில் சென்னை மாகாணம் முக்கிய பங்காற்றியது. தமிழ் மொழி, தமிழாய்வு, தமிழ் கலாச்சாரம், தமிழ் இலக்கியம் அனைத்தும் சிறப்புக்கு உகந்தவை.
தமிழ் மொழி அறிவு செல்வங்களையும், ஆன்மிக இலக்கியங்களையும் பெருமளவில் கொண்டியிருக்கிறது. தமிழ் இலக்கிய செல்வங்கள் அனைத்து பகுதிகளுக்கும் ஆழமாகவும், பரந்து விரிந்து பரவ வேண்டும்.இன்னும் எங்கெங்கு தமிழ் சென்று சேரவில்லையோ அங்கெல்லாம் தமிழை பரப்ப வேண்டும் என கூறினார். மேலும், கலாச்சாரம், பண்பாட்டிற்கு மட்டுமின்றி தொழில்துறையிலும் பாரம்பரியம் கொண்டது இந்தியா. காலனி ஆதிக்கம் உருவான 1750-களில் இந்தியா மற்றும் சீனாவின் தொழில்துறை உற்பத்தி உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 73% ஆகும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…