தமிழை பிற மாநிலங்களுக்கு பரப்ப வேண்டும் – ஆளுநர்

Default Image

தமிழ் மொழியை பிறமாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை.

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, சென்னை பல்கலைக்கழகம் பழமையானது மட்டுமல்ல, பெரும் சிறப்பு வாய்ந்தவையாகும். நாட்டின் அனைத்து துறைகளிலும் புகழ்பெற்ற தலைவர்களை உருவாக்கியது சென்னை பல்கலைக்கழகம். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் நோபல் பரிசை பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள். சென்னை பல்கலைக்கழகத்தின் இழந்த பெருமையை மீட்டெடுக்க ஆசிரியர்களும், இதர ஊழியர்களும் பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் குறிப்பிட்டது போல் தமிழ் மிகவும் பழமையான மொழி. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும். நீதி வேண்டி நீதிமன்றங்களை அணுகுவோருக்கு வழக்கு விவாதங்கள் புரிய வேண்டும். தமிழ் மொழியை பிறமாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழ் இருக்கைகளை பிற மாநில பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சிப்பேன். முதலமைச்ச பேரவையில் அறிவித்தபடி, 4,500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டை அறிந்திருந்தனர். 1800-களில் இரும்பு உற்பத்தியில் சென்னை மாகாணம் முக்கிய பங்காற்றியது. தமிழ் மொழி, தமிழாய்வு, தமிழ் கலாச்சாரம், தமிழ் இலக்கியம் அனைத்தும் சிறப்புக்கு உகந்தவை.

தமிழ் மொழி அறிவு செல்வங்களையும், ஆன்மிக இலக்கியங்களையும் பெருமளவில் கொண்டியிருக்கிறது. தமிழ் இலக்கிய செல்வங்கள் அனைத்து பகுதிகளுக்கும் ஆழமாகவும், பரந்து விரிந்து பரவ வேண்டும்.இன்னும் எங்கெங்கு தமிழ் சென்று சேரவில்லையோ அங்கெல்லாம் தமிழை பரப்ப வேண்டும் என கூறினார். மேலும், கலாச்சாரம், பண்பாட்டிற்கு மட்டுமின்றி தொழில்துறையிலும் பாரம்பரியம் கொண்டது இந்தியா. காலனி ஆதிக்கம் உருவான 1750-களில் இந்தியா மற்றும் சீனாவின் தொழில்துறை உற்பத்தி உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 73% ஆகும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்