தமிழ் பள்ளியை மூடக்கூடாது – குஜராத் முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்
தமிழ் பள்ளியை மூடக்கூடாது என குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத், மணிநகர் போன்ற பகுதிகளில் அதிக அளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.அங்கு தமிழுக்காக தமிழ் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. அகமதாபாத் பகுதியில் ஒரு தமிழ் பள்ளி செயல்பட்டு வந்தது.இதனிடையே அந்த பள்ளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மாணவர்கள் எண்னிக்கை குறைவாக உள்ள காரணத்தால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் அந்த பள்ளியில் படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று பெற்றோர்கள் வேதனை தெரிவித்தார்கள்.
இந்நிலையில் தமிழ் பள்ளியை மூடக்கூடாது என முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.மேலும் அவரது கடிதத்தில், தமிழக புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் படித்த பள்ளி மூடப்பட்டதை அறிந்து வருத்தமடைந்தேன் தமிழ் பள்ளி மூடப்படுவதால் மாணவர்கள் கல்வியை தொடர முடியவில்லை. பள்ளிக்கூடம் செயல்படுவதற்கான செலவினங்களை தமிழக அரசு ஏற்க தயார். தமிழ் மொழி சிறுபான்மையினரின் கல்வி உரிமையை குஜராத் அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் பள்ளியை மூடக்கூடாது எனவும்,பள்ளிக்கூடம் செயல்படுவதற்கான செலவினங்களை தமிழக அரசு ஏற்க தயார் – குஜராத் முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்#Gujarat | #VijayRupani | #TamilNadu | #EdappadiPalaniswami | #schools pic.twitter.com/fGud4ZMInd
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 24, 2020