யாராலும் தமிழை அழித்துவிட முடியாது!
அமைச்சர் ஜெயக்குமார் உலகின் மூத்த மொழியான தமிழை யாராலும் அழித்துவிட முடியாது என கூறியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக தமிழை நசுக்கப் பார்ப்பதாக ராகுல்காந்தி கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. தமிழ் மொழியை யாராலும் அழித்துவிட முடியாது என்றும், உலகின் மூத்த மொழியான தமிழ், உலகம் உள்ளவரை தழைத்தோங்கும் என்றும் ஜெயக்குமார் பதிலளித்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்ட 6 வார கால கெடுவுக்கு, இன்றும் 11 நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு எப்போது அழுத்தம் கொடுத்து, மத்திய அரசால் எப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டனர். இந்த கேள்வியை 11 நாட்கள் கழித்து கேட்குமாறு கூறிவிட்டு விருட்டென்று அமைச்சர் ஜெயக்குமார் புறப்பட்டுச் சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.