தமிழ் புத்தாண்டு சித்திரையே. கிறித்தவர்களோ முஸ்லிம்களோ இதை கொண்டாடுவதில்லை. இது இந்து பண்டிகையே.
தமிழகத்தில் முன்னதாக கலைஞர் ஆட்சியின் போது பொங்கல் கொண்டாடப்படும் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதிமுக ஆட்சி அமைந்தபோது தை முதல் நாள் பொங்கல் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்தது.
இதனையடுத்து, தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் ஜனவரியில் பொங்கல் கொண்டாடுவதற்கான பொங்கல் தொகுப்பு பையில் ‘பொங்கல் வாழ்த்துக்களுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என்ற வாசகம் அச்சிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திமுக திருந்தாது. இந்துக்களின் மதநம்பிக்கை மற்றும் பண்டிகை நாட்களில் அரசு தலையிடுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல மதசார்பின்மைக்கு விரோதமானதுமாகும். தமிழ் புத்தாண்டு சித்திரையே. கிறித்தவர்களோ முஸ்லிம்களோ இதை கொண்டாடுவதில்லை. இது இந்து பண்டிகையே. தி.மு.க வை புறக்கணிப்போம்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…