ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் ரகுபதி
ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் ரகுபதி பேட்டி.
ரகுபதி அவர்கள் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி. செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை சுபஸ்ரீ மரண வழக்கு என்னிடம் அளித்தால் குற்றவாளிகளை 7 நாளில் கண்டுபிடிப்பேன் என்று கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, அண்ணாமலை என்ன செய்வார் என்று எங்களுக்கு தெரியாதா? கர்நாடகாவில் அவர் போட்ட வழக்கை போய் விசாரணை செய்ய சொல்லுங்கள் என்று விமர்சித்துள்ளார்.