தமிழகத்தின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் என்றால் வைகோ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவரிடம் திமுக தொடர்ந்த வழக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர் பதில் அளிக்கையில், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இல்லை.இதன் காரணமாக அதனுடைய கூட்டணி கட்சிகளையும் தற்போது தூண்டிவிட்டு பல்வேறு வழக்குகளை போட்டு வருகின்றது என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் என்றால் வைகோ மட்டுமே இருக்கிறார் என்றும் அவரை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கடன் வழங்கி மாநிலம் தமிழ்நாடு தான் என்ற அடிப்படையில் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை அதிமுக அரசு 2-வது முறையாக பெற்றுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கியதால் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு விருது வழங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…