தமிழகத்தின் நண்பன் மோடி…! ராசியான முதல்வர் பழனிசாமி…! – சி.டி.ரவி
தமிழகத்தின் நண்பன் மோடி, தமிழக கலாச்சாரத்தை நாங்கள் தான் பாதுகாத்து வருகிறோம் என்று சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாட்டு நிகழ்ச்சிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி ஒரு எளிய மனிதர். மொத்தத்தில் அவர் ராசியான முதல்வர் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் நண்பன் மோடி, தமிழக கலாச்சாரத்தை நாங்கள் தான் பாதுகாத்து வருகிறோம் என்றும், திமுக-காங்கிரஸ் வாரிசு அரசியல், குடும்ப வளர்ச்சியை முன்னிறுத்தி செயல்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.