தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு – திமுக எம்.பி கனிமொழி கண்டனம்!

Default Image

தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்ததற்கு மத்திய அரசை கண்டித்து திமுக எம்.பி கனிமொழி ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். 

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு கோரப்பட்ட தமிழகத்தின் ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது.

இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்