ஊழல் மிகுந்த ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது – திருமாவளவன்

ஊழல் மிகுந்த ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், இன்று காலை 11:30 மணியளவில் தலைமை செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இவர் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, இது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறுகையில், அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மை சரியாக கையாளப்படவில்லை. ஊழல் மிகுந்த ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது. தேர்தல் காலத்தில் திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை தள்ளிபோடக் கூடாது என்றும், தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கடன் சுமை அதிகரித்துள்ளது கவலைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.