தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு அங்கீகாரம் கொடுத்து இருக்கிறார்கள்-அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு அங்கீகாரம் கொடுத்து இருக்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தோம்.
தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு அங்கீகாரம் கொடுத்து இருக்கிறார்கள். மகிழ்ச்சி அளிக்கிறது.தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 தொகுதிளுக்கும் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிக்கும் .அதில் அதிமுக அமோக வெற்றி பெறும்.
முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது வேலைவாய்ப்பு காகவும் முதலீட்டுக்காக தான். இந்த சுற்றுப் பயணம் மகத்தான வெற்றி பயணமாக அமையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025