கனமழைக்கு ‘நோ’.! மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை மட்டுமே பெய்யும். – வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் இந்த வாரம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்து இருந்தது. இதனை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை மட்டுமே பெய்யும் எனவும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். தென்-கிழக்கு, தென்-மேற்கு கடற்கரையில் காற்று வீசக்கூடும் எனபதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .