தொழில் வளர்ச்சில் முதன்மை மாநிலமாக தமிழகம் உருவாகும்.! – முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை.!
தொழில் வளர்ச்சில் முதன்மை மாநிலமாக தமிழகம் உருவாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை. தமிழக வருமானத்தை 1 டிரில்லியன் பொருளாதரரமாக மற்ற தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை நுங்கப்பாக்கத்தில், நடைபெற்று வரும் தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினர்க கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் முக்கிய தொழிலதிபர்கள், அமைச்சர்கள் அன்பரசன், கணேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 1920ஆம் ஆண்டு தான் தென்னிந்திய தொழிலதிபர்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. அந்த 1920 என்பது முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டுதான் திராவிட கழகத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சி அமைத்த ஆண்டு. அப்போது பல்வேறு முயற்சிகள் தொழில்துறை மேம்படுத்த முன்னெடுக்கப்பட்டன. நீதி கட்சியை தொடங்கிய தியாகராயர் தென்னிந்திய வர்த்தக கழகத்தை உருவாக்கினார். 12 ஆண்டுகாலம் பதவி பொறுப்பில் இருந்த அவர் பல்வேறு தொழிழ்த்துறை முன்னேற்ற ஏற்பாடுகளை செய்தார். சென்னை மாகாணத்தின் தொழில்வளர்ச்சியில் முக்கிய பங்கு திராவிட கழகத்துக்கு உண்டு.
மற்ற மாநிலங்களுக்கு முன்னுதரணமாக தொழிற்சங்கம் இங்கு தான் உருவானது. தொழிலாளர் உரிமையை தமிழகம் கேட்டு வாங்கியது. தூத்துக்குடி தொழிச்சார்ச்சங்கம் 1905ஆம் ஆண்டு வஉசி உருவாக்கினார். இன்று அவருக்கு நினைவு நாள். தொழில் முதலீட்டார்கள் ஒன்றினைந்து, தொழிலாளர்களுடன் ஒருங்கிணைந்து செல்லவும் தான் தென்னிந்திய பணியளிப்போர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இது ஆரம்பிக்கும் போது, நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழிற்சங்கங்கள் என மொத்தம் 720 உறுப்பினர்கள் உடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 10 லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ளது.
தமிழகத்தின் தொழில்வளர்ச்சிக்கு கடந்த 15 மாதங்களில் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உருவாக முயற்சி நடைபெற்று வருகிறது. தமிழக வருமானத்தை 1 டிரில்லியன் பொருளாதரரமாக மற்ற தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு நாடுகள், பல்வேறு மாநிலங்கள் தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க முன்வருகின்றனர்.
அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் நலன் கருதி தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் மூலமாக தொழிலாளர்கள் நலனுக்காக கல்வி, திருமணம், இறப்பு இழப்பீடு தொகை, ஓய்வு இல்ல வசதி வழங்கப்பட்டு வருகிறது. என முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.