ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்பட்டால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும் – சீமான் எச்சரிக்கை

Published by
பாலா கலியமூர்த்தி

ஸ்டெர்லைட்டை திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் காலச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதாகக் கூறி நாசகார ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடக்கும் முயற்சிகள் பேரதிர்ச்சி தருகின்றன.

மக்களின் உயிருக்கும், மண்ணின் நலத்துக்கும் தீங்கு விளைவிக்கிற, நச்சு ஆலை என்று உயர் நீதிமன்றத்தாலேயே குறிப்பிடப்பட்ட, சூழலியல் கேடுகளுக்காக ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட கொடிய ஸ்டெர்லைட் ஆலையை எந்த நிலையிலும் மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது.

கொரோனா நோயாளிகளின் உயிர்களைக் காக்க அவர்களுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேறு வழியே இல்லை என்பது போல ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது குறித்து ஆலோசிப்பது அபத்தமானது, அவமானகரமானது.

பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு நாட்டில், ஒரு அவசரத் தேவைக்குச் சுவாசக்காற்றை உற்பத்தி செய்யக்கூட மாற்று வழிகளில்லையா? என்றும் ஸ்டெர்லைட் ஆலையைவிட்டால் ஆக்சிஜனைக் கொண்டு வர வாய்ப்புகளே வேறு ஏதுமில்லையா? எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின் வழியாக ஊடுருவப் பார்க்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டிய தமிழக அரசு, நீதிமன்றத்தில் எதிர் நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, தற்போது கருத்துக்கேட்புக் கூட்டம், அனைத்துக் கட்சிக்கூட்டம் என வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாகக் காய் நகர்த்துவது தேவையற்ற சிக்கலையும், பதற்றத்தையும் தமிழகத்தில் உருவாக்கும்.

எனவே, தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும் என்றும் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் எனவும் எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மகாராஜா வசூலை மிஞ்சிய விடுதலை 2 ! மூன்று நாட்களில் இவ்வளவா?

மகாராஜா வசூலை மிஞ்சிய விடுதலை 2 ! மூன்று நாட்களில் இவ்வளவா?

சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை…

13 minutes ago

கோலாகலமாக நடந்த பிவி சிந்து திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்!

ராஜஸ்தான் :  கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன்…

45 minutes ago

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்..! மொறு மொறு கல்கல் செய்வது எப்படி?. வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…

1 hour ago

பிரேசில் நகரில் விழுந்து நொறுங்கிய விமானம்: 10 பேர் உயிரிழப்பு!

பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…

1 hour ago

2026 தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்க திட்டமா? திருமாவளவன் பதில்

கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…

2 hours ago

தேர்தல் விதிகள் திருத்தம் : பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் எதிர்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…

2 hours ago