நாம் தமிழர் ஆட்சியில் கல்வித்துறையில் உலகின் முதல் இடத்திற்கு தமிழகம் வரும் – சீமான்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வித்துறையில் உலகின் முதன்மையான இடத்திற்கு தமிழகம் வரும் என சீமான் பரப்புரையில் உறுதியளித்தார்.
கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும் என்றும் அந்த தேர்தலிலும் 50% பெண் வேட்பளர்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் மிக குறைவு என குறிப்பிட்ட சீமான், பாஜகவின் மெயின் டீம் திமுகதான் விமர்சனம் செய்துள்ளார். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை கொண்டுவந்தது காங்கிரஸ் தான் என தெரிவித்த அவர், காங்கிரஸ் மற்றும் பாஜகவை தொடர்ந்து எதிர்ப்போம் என்று குறிப்பிட்டார்.
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி அளிக்கப்படும் என்றும் தாய்மொழி தமிழில் தான் பாடங்கள் கற்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். கல்வித்துறையில் கொரியாவை மிஞ்சி உலகின் முதன்மையான இடத்திற்கு தமிழகத்தை கொண்டுவருவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025