காச நோய்’ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி
2025ஆம் ஆண்டுக்குள் ‘காச நோய்’ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டது சரித்திர சாதனை ஆகும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தரமான மருத்துவ கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2025ஆம் ஆண்டுக்குள் ‘காச நோய்’ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும்.மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெரும் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது .தமிழகத்தில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுகிறது.சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் மூலம் மக்கள் குறைகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.