அடுத்த 4 முதல் 5 நாட்கள் தமிழகத்தில் நல்ல மழை.. தமிழ்நாடு வெதர்மேன்!

Published by
பாலா கலியமூர்த்தி

TN Rain: தமிழகத்தில் அடுத்த 4 முதல் 5 நாட்களில் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தகவல்.

கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்துள்ளது. திருப்பத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, தருமபுரி, கரூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், சில பகுதிகளில் வெப்ப அலை வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு ஒரு நல்ல செய்தி வந்து உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது எக்ஸ் வலைதள பதிவில், மார்ச் மற்றும் ஏப்ரல் முதல் பாதிக்குப் பிறகு, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அதில் டெல்டா, தென் தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு, கேரளா, கடலோர மற்றும் கர்நாடகா மாநிலத்தின் உள் பகுதி, உள் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு நல்ல செய்தி வந்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, கொடைக்கானல், வால்பாறை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு நல்ல மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வெப்பம் கட்டுக்குள் இருந்து வறண்ட நிலையில் காணப்படும் எனவும், பெங்களுருவில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

10 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

10 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

11 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

12 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

13 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

15 hours ago