தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
மழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையில், அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தில் வானிலை மிகவும்மோசமாக இருக்கும் .எனவே ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுகப்பட்டது.அதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையவேண்டும் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்புதுண்டிக்கப்படும்.தமிழகத்தில் 25 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் .கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்என்றும் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.ரெட் அலர்ட்டை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கன்னியாகுமரி ,நீலகிரி,மதுரை,கோவை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்ப்புப்படையினர் சென்றனர்.
இந்நிலையில்இன்று தமிழகத்தில் நாளை அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் , மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை அதி கனமழை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது.நேற்று உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவான குறைவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் இருக்கிறது.குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு இன்று முதல் 8ம் தேதி வரை மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்.ஆனால் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்படுகிறது என்றும் அறிவித்தது.ஆனால் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் ,தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது வருகின்ற 9 ஆம் தேதி வரை கனமழை பெய்யும்.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…