பெரியாரின் பிறப்பால் தான் தமிழினம் புதுப்பிறப்பை அடைந்தது – முதல்வர்!
பெரியாரின் பிறப்பால் தான் தமிழினம் புதுப்பிறப்பை அடைந்தது என முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்று தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தார். அதன்பின்பு அவர் ஏற்கனவே அறிவித்தபடி தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தற்பொழுதும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மக்கள் மன்றம், நீதிமன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்து மக்கள் மனங்களிலும் சமூகநீதியை விதைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை அவர் பிறந்தநாளான இன்று வணங்குகிறோம். அவர் பிறப்பால்தான் தமிழினம் புதுப்பிறப்பை அடைந்தது. மானமும் அறிவும் உள்ள சமுதாயம் ஆனது.
ஒடுக்கப்பட்டோர் ஒளிபெற்றார்கள். பெண்ணினம் மேன்மை அடைந்தது. அத்தகைய பேரொளி பிறந்தநாளில் சமூகநீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடே எடுத்துக் கொண்டது. சமநிலைச் சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம் அய்யா என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
மக்கள் மன்றம், நீதிமன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்து மக்கள் மனங்களிலும் சமூகநீதியை விதைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை அவர் பிறந்தநாளான இன்று வணங்குகிறோம். அவர் பிறப்பால்தான் தமிழினம் புதுப்பிறப்பை அடைந்தது. மானமும் அறிவும் உள்ள சமுதாயம் ஆனது.#HBDPeriyar pic.twitter.com/aYN0jZdQwH
— M.K.Stalin (@mkstalin) September 17, 2021
ஒடுக்கப்பட்டோர் ஒளிபெற்றார்கள். பெண்ணினம் மேன்மை அடைந்தது.
அத்தகைய பேரொளி பிறந்தநாளில் சமூகநீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடே எடுத்துக் கொண்டது.
சமநிலைச் சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம் அய்யா!#HBDPeriyar143 pic.twitter.com/fsfreATuTa— M.K.Stalin (@mkstalin) September 17, 2021