தமிழ்நாடு வக்பு வாரிய தேர்தல் அட்டவணை வெளியீடு!!
தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நாளை வேட்புமனு தாக்கல் என்றும் வரும் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளார். வரும் 19ஆம் தேதி வேட்பாளர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் அவசியமானால் 26ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், 27ஆம் தேதி வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தேர்தல், நடந்தது. இதில் புதிய தலைவராக, முன்னாள் எம்.பியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவருமான அப்துல் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.