தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா.! முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியீடு!!

மாமல்லபுரத்தில் நடைபெறும் இவ்விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், மூன்று முக்கிய பிரபலங்கள் இன்று இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TVK Vijay‌

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று காலை நடைபெறவுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் இந்த விழாவானது தொடங்கவிருக்கிறது.

இந்த விழாவில், தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுன் , தேர்தல் வியூக பணியில் கைகோர்த்துள்ள பிரசாந்த் கிஷோரும் இந்த விழாவில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு 2500 பேர் பங்கேற்க மட்டுமே பாஸ் தரப்பட்டுள்ளன, ஒரு மாவட்டத்திற்கு தலா 15 பாஸ் தரப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த விழாவில், தவெக 2ஆம் ஆண்டு விழாவையொட்டி தலைவர் விஜய் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார். 2026 சட்டசபை தேர்தல், கூட்டணி, கட்சியை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாகவும், தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக விஜய் உரையாற்ற வாய்ப்புள்ளது.

நேற்றைய தினம் விஜய், பிரசாந்த் கிஷோரை சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தவெக இரண்டாம் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த பி.கேவிடம் எதிர்கால அரசியல், 2026 தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், மாமல்லபுரத்தில் நடைபெறும் இவ்விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், மூன்று முக்கிய பிரபலங்கள் இன்று இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாதகவில் இருந்து நேற்று விலகிய காளியம்மாள், பாஜகவில் இருந்து இன்று விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த மருது அழகுராஜ் ஆகியோர் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்