கோழி வளர்ப்பில் தமிழ்நாடு முதலிடம்! – கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்!
கோழி வளர்ப்பில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக கால்நடை பராமரிப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கால்நடை, வேளாண்மை, பால்வளம் உள்ளிட்ட துறைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் தாக்கல் செய்து வருகின்றன. அந்தவகையில், கால்நடை பராமரிப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தேசிய அளவில் தமிழ்நாடு கோழியின எண்ணிக்கையில் முதலிடத்திலும், செம்மறியாட்டின் எண்ணிக்கையில் நான்காவது இடத்திலும், வெள்ளாட்டின எண்ணிக்கையில் 7வது இடத்திலும், பசுவின எண்ணிக்கையில் 13வது இடத்திலும், எருமையின எண்ணிக்கையில் 14-வது இடத்திலும் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.