தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான காகிதமில்லா முழுமையான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ள நிலையில்,பல்வேறு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிக்கையில்,”தமிழகத்தில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும்,ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க “தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்க தேடல்” திட்டம் உருவாக்கப்படும் என்றும்,இத்திட்டத்திற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும்” அறிவித்துள்ளார்.
மேலும், வடசென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் நவீன விளையாட்டு வளாகம் ரூ.10 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
அதே சமயம்,உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற போட்டி செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்குச் சர்வதேச நாடுகள் மத்தியில் கடும் போட்டி நடக்கும் நிலையில்,நமது நாட்டில் நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால்,இந்த ஆண்டு தமிழக அரசின் முயற்சியால் முதல் முறையாக ஒலிம்பியாட் 2022 சென்னையில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த போட்டியில் 150 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…