தமிழகம் TO ஒலிம்பிக்;ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு-நிதியமைச்சரின் கலக்கல் அறிவிப்பு!

Default Image

தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான காகிதமில்லா முழுமையான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ள நிலையில்,பல்வேறு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிக்கையில்,”தமிழகத்தில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும்,ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க “தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்க தேடல்” திட்டம் உருவாக்கப்படும் என்றும்,இத்திட்டத்திற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும்” அறிவித்துள்ளார்.

மேலும், வடசென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் நவீன விளையாட்டு வளாகம் ரூ.10 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

அதே சமயம்,உலக அளவில்  மிகவும் புகழ்பெற்ற போட்டி செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்குச் சர்வதேச நாடுகள் மத்தியில் கடும் போட்டி நடக்கும் நிலையில்,நமது நாட்டில் நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால்,இந்த ஆண்டு தமிழக அரசின்  முயற்சியால் முதல் முறையாக ஒலிம்பியாட் 2022 சென்னையில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த போட்டியில் 150 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள்  கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்