நீட் தேர்வு என்பது மத்திய அரசின் முடிவல்ல, அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்று மத்திய கல்வி அமைச்சர் பேட்டி.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு விரைவில் ஏற்றுக்கொள்ளும். தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழியும் இணைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியே நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் சமன் படுத்தவே நீட் தேர்வு. ஏற்கனவே நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மீண்டும் சென்னையில் உள்ள சாலையில் வைத்து சொல்கிறேன். நீட் தேர்வு அரசின் முடிவல்ல, அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, இதில் அரசு தலையிட முடியாது.
கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட மாநிலம். தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பில் தமிழ்நாடு எப்பொழுதும் முன்னிலையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 5G தொலைத்தொடர்பு சேவை இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…